அரசியலில் கொஞ்சம் தலை தூக்கத் தொடங்கிய வருண் காந்திக்கு எத்தனை பெரிய சம்மட்டி அடி!
உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாகப் பேசியது தவறுதான். ஆனால் மன்னிக்க முடியாததல்லவே.
அவருடைய தந்தையின் மரணம் டில்லி சிம்மாசனத்துக்காக அடிமை வம்சக் காலத்திலிருந்தே நடந்து வந்த வாரிசுரிமைப் போரின் தொடர்ச்சி என்பதை உணர்ந்தவர்கள் மிக மிகக் குறைவனவர்களே!
அரசியல் கொலைகளை அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கும் இளவல்களுக்குள்ள வலுவான பின்னணி வருண் காந்திக்கு இல்லைதான்.
இந்தியத் தாலியணிந்த இத்தாலியப் பெண்மணி பெற்ற செல்வாக்கு மேனகா காந்திக்கு வந்துவிடக் கூடாதென்ற சதியின் பிந்திய அங்கமே வருண் காந்தியை வாடி வாசலிலேயே மடக்கிவிடும் திட்டம்.
வேதாந்தி கருணாநிதியின் தலைக்குத் தங்கம் பரிசளிப்பதாக பேசியது காற்றோடு போச்சு!
சுற்றுப் பயணத்தின் போது இரண்டு பேருக்குப் பணம் கொடுத்தாராம் வருண் காந்தி.
கிடா வெட்டி விருந்து கொடுத்து இலைக்கு அடியில் கரன்சி வைக்க வக்கற்றுப் போன வருண் காந்தி அரசியலுக்கு வந்தது எவ்வளவு பெரிய தப்பு!
பாபர் மசூதியை இடித்தவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க இடம் கொடுத்துள்ள இந்திய அரசியலமைச் சட்டம், குற்றவியல் சட்டம், தேர்தல் ஆணையம் அனைத்துமே வரிந்து கட்டிக்கொண்டு வருண் காந்தியின் மீது பாய முற்படுவதன் பின்னணியை நாம் சிந்திக்க மறந்தால் நாதியற்றவர்களின் தொகை நாடு முழுவதும் பெருகிவிடும்.
குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் இரண்டாவது "மனோகரா" தமிழ் நாட்டுடன் நின்றுவிடவில்லை என்பதையே வருண் காந்தி பிரச்சினை சுட்டிக் காட்டுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
நாய் பேய்களின் உரிமைக்காக சட்டம் பேசும் மேனகா காந்தி , மனித உயிர்களை பறிக்கும் எண்ணம் கொண்ட தனது புத்திரனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்ககாதது கொடுமையிலும் கொடுமை .
ReplyDelete//நாய் பேய்களின் உரிமைக்காக சட்டம் பேசும் மேனகா காந்தி , மனித உயிர்களை பறிக்கும் எண்ணம் கொண்ட தனது புத்திரனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்ககாதது கொடுமையிலும் கொடுமை .//
ReplyDeleteஎன்ன செய்வது! அவர் அரசியலில் புகுந்த இடம் அப்படி!