"தேர்தலுக்கு சீட் கேட்டு வந்திருக்கிறியே. உன் பரம்பரை எப்படி?"
"தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. அப்பா மொழிப் போர்த் தியாகி."
"கட்சியில எவ்வளவு நாளா இருக்குற?"
"என் 18 வயசுல இருந்துங்க. கட்சி நடத்துன ஆறு போராட்டங்கள்லேயும் கலந்து சிறைத் தண்டனை பெற்றிருக்கேனுங்க."
"பண வசதி எப்படி?"
"விண்ணப் படிவம் வாங்குறதுக்கே பலரிடத்துல நன்கொடை பெற வேண்டியதாச்சு."
"சரி. நீ போகலாம். அடுத்த ஆள்..."
கனத்த உடம்புடனும் கனத்த சூட்கேசுடனும் வந்தார் ஒருவர்.
"என்னென்ன தகுதி இருக்கு?"
"என் சாதிக்காரங்க தொகுதியில மெஜாரிட்டி கள்ளச் சாராயம், கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து நம்ம தொழிலுங்க!"
"கட்சியில எப்பச் சேந்தீங்க?"
"இப்பவே சேந்துடறேனுங்க!"
"எவ்வளவு செலவழிக்க முடியும்?"
"இப்போதைக்கு ஒரு வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாமுங்க!"
"நீங்க போகலாம்."
கட்சித் தலைவர், செயலாளர், பொருளாளர் மூவரும் உடனடியாக ஒரு மனதாக இரண்டாவதாக வந்தவரை வேட்பாளராக்க முடிவு செய்தனர்!
Subscribe to:
Post Comments (Atom)
ஆஹா... நீங்கள்தானா! தமிழ்ச்செல்வன் பக்கம் மூலமாக அறிந்து வந்தேன். ரொம்ப சந்தோஷமாயிருக்கு தோழரே!! வாருங்கள், வாருங்கள். இயல்பான மொழிநடையில் இருக்கிறது பதிவுகள். வாழ்த்துக்கள்.
ReplyDelete